முதுகுளத்தூர் மார்ச். 09
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா செல்வநாயகபுரம் ஊராட்சியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது, இதில் மகளிர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது அதனை தொடரந்து இராமநாதபுரம் மெற்கு மாவட்ட தலைமை மதன் அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்தார் முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலளர் விஜித் அனைவரையும் வரவேற்றார். மெற்கு மாவட்ட தலைமை மதன் மகளிர் தினம் வாழ்த்துக்கள் தெரிவித்து பேசத் தொடங்கிய மதன் மக்களுக்கு சேர வேண்டிய திட்டங்களை சரியாக செய்யாமல் கொள்ளை அடிப்பதகவும் அதனை மக்கள் கேள்வி கேக்க வேண்டும் என்று மக்களுக்கு தெரிவித்தனர். உங்களின் குறைகளை எங்களிடம் தெரியப்படுத்துங்கள் அதனை சரி செய்து தருகிறோம் என்று பொதுமக்களில் குறைகளை கேட்டறிந்தார், அதில் படிக்காத பெண்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தை நம்பி இருக்கிறோம் ஆனால் எங்களுக்கு சரியாக வேலை கொடுக்காமல் சிரமப்படுகிரோம் என்று தெரிவித்தனர், அதனை தொடர்ந்து பேசிய சிறுமி பள்ளிக்கூடத்தில் தண்ணீர் வசதி சரியாக இல்லை, வகுப்பறையில் படிப்பதற்கு மேஜை இல்லை என்றும் கண்ணிர் உடன் கோரிக்கை வைத்தார் தவேக நிர்வாகிகள் அந்த சிறுமியை சமாதானம் செய்து நாங்கள் அதனை விரைவாக செய்து தருகிறோம் என்றும் தெரிவித்து அவருக்கு உறுதி அளித்தனர். தமிழக வெற்றிக் கழகம் தொண்டரணி யாசர் மகளிருக்கு வாழ்த்தி தெரிவித்ததை தொடருது தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது தளபதியின் விருப்பம் மற்றும் பெண்களுக்கு என்னென்ன குறைகள் இருக்கிறதோ அதனை நாங்கள் சரி செய்து தருவதாகவும் தெரிவித்தார் மக்கள் யாசர்-ரிடம் எங்கள் கிராமத்தில் தண்ணீர் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாகவும் குடிக்கும் தண்ணீர் விலைக்கு வங்க முடியாமல் இருப்பதாக தெரிவித்து அதனை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர், அதனை தொடர்ந்து பேசிய யாசர் உங்களுக்கு குடிநீர் கிடைக்க விரைவாக ஏற்பாடு செய்கிறோம் என்று உறுதி அளித்தார், மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்து எங்களின் ஆதரவு உங்களுக்கு தந்து வரும் தேர்தலில் ஒட்டுக்கு யாரும் பணம் பெறாமல் வாக்களிப்போம் என்றும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.