திண்டுக்கல்லில் ஆசீர்த் அறக்கட்டளையின் சார்பாக மகளிர் தின விழா நிகழ்ச்சி திண்டுக்கல் ஓய்.எம். ஆர்.பட்டி அருகே உள்ள ஸ்ரீநிதி மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முதுகலை ஆசிரியர் ப.மகாலட்சுமி தலைமை தாங்கினார்.ஆசீர்த் அறக்கட்டளையின் இயக்குனர் வீ. அஜய் ராஜ்குமார் வரவேற்பு உரை ஆற்றினார். வசந்தி கணேசன் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வி. ஜெயராமன், திண்டுக்கல் திருக்குறள் இயக்க தலைவர் வள்ளுவ செல்வம், கிரீடம் பவுண்டேஷன் இயக்குனர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வேடசந்தூர் முன்னாள் எம்எல்ஏ வி.பி.பி.பரமசிவம், நாட்டாண்மை டாக்டர் என்.எம்.பி.காஜாமைதீன், கவிஞர் ஜீவி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன், திருக்குறள் பேரவை கவிஞர் ச.சிவகுமார்,
வடமதுரை தமிழ்சங்க தலைவர் கவிஞர்.
கோ.நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பல்வேறு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ஜெயராணி, தலைமை ஆசிரியர் சீனியம்மாள், நல்லாசிரியர் லதா மகேஸ்வரி, முதுகலை தமிழ் ஆசிரியர் பொன்மேரி, ஆசிரியர் மீராபாய், சமூக ஆர்வலர் சேக் தாவுது ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியை சமூக செயல்பாட்டாளர் பாலமுருகன் சிறப்பாக தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் கவிஞர். சுபா கிட்டு நன்றி கூறினார்.