திருப்பத்தூர்:மார்ச்:8,
உலகம் முழுவதும் நாளைய தினமான மார்ச் 8 அன்று உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மொளகாரம்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரி சார்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக 7 ஆம் தள கூட்ட அரங்கில் உலக மகளிர் தின விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி கேக் வெட்டி அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துக்களை கூறினார்.
தொடர்ந்து வெட்டிய கேக்கை ஊட்டி விட முற்படும் பொழுது இங்கு வயதில் மூத்தவருக்கு மட்டுமே கேக் ஊட்டி விடுவேன் என்று அடம்பிடித்த மாவட்ட ஆட்சியர் பின்பு தேடிப் பிடித்து அங்கிருந்த துப்புரவு பணியாளர்களுக்கும் கேக் ஊட்டி மகிழ்ந்தார்.
மேலும் கல்லூரி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஊக்க உரை அளித்துக் கொண்டிருந்தபோது பெண் ஒருவர் இந்த சமூகத்தில் பெண்களுக்கு உரிய மரியாதை இல்லை என்று ஆதங்கப்பட்டு கொண்டார். அப்போது தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் பெண்களை உயர்த்தி பிடித்து ஒரு நாள் மட்டுமே பெண்கள் தினத்தை கொண்டாடுகிறார்கள் ஆனால் ஒவ்வொரு நாளும் பெண்கள் தினம் தான் பாரதி அன்றைக்கே ஆணுக்குப் பெண் சமம் என்று கூறிவிட்டு சென்றார் என்று பேசிக்கொண்டிருந்த போது கூடத்தில் இருந்த பெண் ஒருவர் அந்த பாரதி இன்று இருந்திருந்தால் ரத்தக்கண்ணீர் விட்டிருப்பார் என்று ஆவசமாக எதிர்குரல் எழுப்பினார். அப்போது மேலும் பேசிய மாவட்ட ஆட்சியர் அங்கீகாரத்தை ஆண்களிடமிருந்து எதிர்பார்க்காதீர்கள் உங்கள் அங்கீகாரத்தை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் ஆண் என்பவர் நம்மை போன்ற ஒரு பால் இனம் தான் அதே போல் இந்த உலகத்தில் மாமியார் மருமகள் சண்டை வராத வீடே கிடையாது எனவே பெண்களுக்கு பெண் ஒத்தாசை செய்து கொள்ளுங்கள் என்றும் சென்னை போன்ற பெரு நகரங்களில் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மிளகாய் பொடி ஸ்பிரே போன்றவற்றை வைத்திருப்பார்கள் அதுபோன்ற அடிப்படை தற்காப்பு கலைகளை அனைவரும் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி உற்சாகப்படுத்தினார்.