ஈரோடு நவ 20
ஈரோடு மாநகராட்சி சூரியம்பாளையம் மண்டலம்-1க்குரிய 4-வது வார்டு வி கே எல் நகர் பகுதி பொது மக்கள் குறிஞ்சியார் முன்னேற்ற பேரவை தலைவர் சந்திர சேகரன் தலைமையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்
அதில் கூறி இருப்பதாவது
சுமார் 15 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பல்வேறு சமூக மக்கள் மேற்கண்ட பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். குடியிருப்பு பகுதி முழுவதும் ஈரோடு மாநகராட்சியான இந்த பகுதியில் அடிப்படை வசதியான சாலை வசதி, சாக்கடை வசதி, மற்றும் குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு மைதானம் மற்றும் கழிப்பிட வசதி போன்றவை இல்லை.
பொது மக்கள் அனைவரும் மாலை நேரங்களில் வெளியில் வந்து செல்ல பயம் குழந்தைகள்
பொது மக்கள் அனைவரும் மாலை நேரங்களில் வெளியில் வந்து செல்ல பயம் குழந்தைகள் பாதுகாப்பின்மை கொசுத்தொல்லை ன்ற பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். மேலும் குடியிருந்து மக்கள் அனைவரும் வருடந்தோறும் மண்டல அலுவலகத்தில் வீட்டுவரி மற்றும் இதர வரிகளை செலுத்திவருகின்றோம். மேலும் பலமுறை மண்டல அலுவலகத்தில் குறைகளை கடிதம் மூலம் வழங்கப்பட்டும் நடவடிக்கை எடுக்க வில்லை. ஆகவே மாநகராட்சி நிர்வாகமும், எங்கள் பகுதி வாழ் மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.