சென்னை. ஆகஸ்ட்- 06, தேசிய உடல் உறுப்பு தான தினத்தில் உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினரை கௌரவிக்கும் நிகழ்ச்சி சென்னை வட பழனி சிம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற டி.ஜி.பி ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்திரை பாராட்டி நினைவு பரிசினை வழங்கினார் .
மேலும் இந்திகழ்ச்சியில் சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் ராஜேஷ் சிவசாமி, டாக்டர் ராம் பிரபா கர், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு உடல் உறுப்பு தானத்தின் சிறப்பை பற்றி விளக்கினர்.
மேலும் ஓய்வு பெற்ற டி.ஜி.பி ரவி பேசுகையில் அமெரிக்கா உடலுறுப்பு தான தினமாக ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று கொண்டாடுகிறது.
இந்தியாவில் ஆகஸ்ட் 03 ஆம் தேதி தேசிய உடலுறுப்பு தான தினமாக இந்த ஆண்டு முதல் கொண்டாடுகிறது.
இந்தியாவில் மருத்துவத்துறையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. உடல் உறுப்ப தானத்திலும் தமிழகம் கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை முதலிடத்தில் இருந்தது. தற்போது தேசிய அளவில் தெலுங்கானா மாநிலம் உடலுறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது. பெண்கள் தான் உடலுறுப்பை அதிகம் தானமாக அளிப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் நிமிடத்திற்கு 8 இதயமாற்று தேவை படுதிறது. ஆகவே தேவைகள் அதிகமாக உள்ள நிலையில் மற்றொரு உயிர் காக்க உடலுறுப்பு தானம் அவசியம் என்று கூறினர்.
மேலும் சிம்ஸ் மருத்துவமனை துணைத்தலைவர் ராஜேஷ் சிவசாமி கூறியதாவது:-
உயிருடனும் இருக்கும் போதோ, இறந்த பின்போ உடலுறுப்பை தானமாக அளிக்கலாம். இறந்தபின்பு எரிப்பது புதைப்பது சடங்காய் இருக்கலாம். ஆனால் இறந்த பின்பு உறுப்புகளை தானமளித்தால் இறந்தபின்பும் வாழ்வார்கள் .
இதை அனைவரும் கருத்தில் கொண்டு நாம் உயிருடன் இருக்கும் போதே உடல்தானம் செய்ய முன்வரவேண்டும். இதற்கான விழிப்புணர்வு நிகழ்வாக தான் சிம்ஸ் மருத்து மனை ஏற்பாடு செய்யதது என்று அவர் தெரிவித்தார்.