நாகர்கோவில் ஜூலை 8
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியைச் சோ்ந்த மோகனன் மனைவி சுமதி. இவா் ஞாயிற்றுக்கிழமை களியக்காவிளை பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு சென்றுவிட்டு, வீடு திரும்புவதற்காக களியக்காவிளை பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்தில் படந்தாலுமூடு சென்றாா். அவர் சென்ற பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமிருந்ததாம். அவர் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தம் வந்ததும் பேருந்திலிருந்து இறங்கியபோது, அவா் அணிந்தத 3 சவரன் தாலிச் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம். இதை அடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், களியக்காவிளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா். குமரி மாவட்டத்தில் அண்மை நாட்களாக பேருந்தில் தங்க சங்கிலி திருட்டு அதிகமாக ஆங்காங்கே நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.