நாகர்கோவில் டிச 19
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஓடும் பேருந்தில் தங்க செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண்ணை, அதில் பயணித்த பயணிகளே சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.ஓடும் பேருந்தில் செயின் பறித்து கையும் களவுமாக சிக்கிய பெண் தப்பி ஓட முயன்ற நிலையில், அவரை பயணிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். இதுபற்றி பார்ப்போம்.
நமது ஊர்களில் பேருந்துகளில் பயணிப்போர் மிகவும் கவனமாக பயணிக்க வேண்டும். குறிப்பாக கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பஸ்களில் ஏறி செல்பவர்கள் பணம், நகைவைத்திருந்தால் மிகவும் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும். ஏனெனில் ஜேப்படி திருடர்கள் மற்றும் திருடிகள் சர்வ சாதாரணமாக பொதுமக்கள் போல் அமர்ந்து பணத்தை திருடிக்கொண்டும், நகைகளை பறித்துக் கொண்டும் செல்வார்கள். பெண்களிடம் நகை பறித்து செல்லும் திருடிகள் பேருந்துகளில் சர்வ சாதாரணமாக அமர்ந்திருப்பார்கள். திருடர்கள்.. திருடிகள் என்று கண்டுபிடிக்கவே முடியாத அளவிற்கு அவர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் கண் நம் மீதும் , நம் பணம் மற்றும் நகை மீதும் இருக்கும். சரியாக கூட்ட நெரிசலை பயன்படுத்தி கனநொடியில் திருடிவிட்டு எஸ்கேப் ஆவார்கள்.அவர்கள் திருடுவதில் நன்கு அனுபவம் உள்ளவர்கள் என்பதால் அவர்கள் மாட்டிக் கொள்வது அபூர்வமாகும்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது. ஆனால் திருடிய பெண் கையும் களவுமாக சிக்கி அசிங்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செவ்வாய்க்கிழமை மதியம் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.. அந்த பேருந்தில் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. அதில் இளம் பெண் ஒருவரிடம் சிவப்பு சுடிதார் அணிந்த பெண் நகை பறிப்பில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதைக்கண்டு உஷாரான அந்த இளம் சிவப்பு சுடிதார் அணிந்த பெண் திருடி திருடி என கத்தினார். உடனடியாக
அந்த பெண் மின்னல் வேகத்தில் இறங்கி தப்பி ஓட முயன்றார். அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று விரட்டி பிடித்து அந்த பெண்ணை பேருந்தில் ஏற்றினார்கள். தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்ட பெண் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது அந்த பெண், தப்பி எல்லாம் ஓடமாட்டேன் என்று கூறி அங்கேயே கம்பியை பிடித்தபடி நின்றார். அவரை சுற்றியிருந்த பயணிகள் கடுமையாக விமர்சித்தனர். அந்த பெண்ணை போலீசார் பெண் போலீசாரை வரவழைத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஓடும் பேருந்தில் நகைபறிப்பில் ஈடுபட்ட பெண் கையும் களவுமாக சிக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.