கன்னியாகுமரி,ஜூலை.19-
கன்னியாகுமரி அருகே உள்ள வைகுண்டபதியில் வெளி மாவட்டத்தை சார்ந்த கணவன் மனைவி ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அங்கிருந்து ஒரு வழக்கு சம்பந்தமாக விசாரணைக்காக கணவன் மனைவியை பெண் போலீசார் கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது காவல்நிலைய வளாகத்திற்கு வந்தபோது அந்த பெண்ணிற்கு திடீரென மயக்கம் வந்தது போன்று கீழே விழுந்துள்ளார். உடனே அவருடைய கணவன் அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளித்தபடியும், உடம்பை தட்டி எழுப்பிய படியும் பார்த்துள்ளார்.
ஆனால் அந்த பெண் எந்த சலனமும் இன்றி கிடந்தார். உடனே ஆட்டோ மூலம் கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம்
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார்.தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.