சுசீந்திரம் நவ 24
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள கற்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மனைவி சாந்தி வயது 37, ராஜேந்திரன் வெளிநாட்டில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். சாந்தி தீராத வயிற்று வலியினால் அவதிப்பட்டு வந்தார். எப்போதும் வீட்டில் இருக்கும் போது சாக வேண்டும் என புலம்பி பேசிக் கொண்டிருந்தவர். நேற்று காலை தனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு. வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தார். தனது பிள்ளைகள் மாலை 4.30 மணிக்கு பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தவரை பார்த்து அதிர்ச்சிஅடைந்தனர்.இது குறித்து சாந்தியின் அம்மா மணிமேகலை சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.