நீலகிரி. ஏப்ரல். 23
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கெங் கரை பஞ்சாயத்திற்குட்பட்ட அம்பாள் காலனி பகுதி உள்ளது. இங்கு சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் 40 ஆண்டு காலமாக அடிப்படை தேவையான சாலை வசதி இல்லாததால் நேற்று இரண்டு நோயாளிகளை அவசர சிகிச்சை காக தொட்டில் கட்டி தூக்கி சென்றுள்ளனர். கடந்த முறை நீலகிரி தொகுதி எம்.பி. ஆ ராசா இங்கு வந்து பார்வையிடும போது உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தவிட்டார்.
அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று வந்து நீண்ட நாட்கள ஆகியும் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் நோயாளிகளை நேற்று தொட்டில் கட்டி தூக்கி சென்ற நிலையில் கிராம மக்கள் தங்களது ஆதார், ரேஷன் கார்டுகளை மாவட்ட ஆட்சியருக்கு பதிவு தபால் மூலம் தபால் நிலையத்திற்கு வந்து அனுப்பி வைத்தனர். அப்போது அங்கு பேச்சுவார்த்தை நடந்த வந்த தாசில்தாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் வரும் அளவிற்காவது செய்து தர வேண்டும் எனவும் சாலை வசதி வந்த பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு சென்று தங்களது ஆவணங்களை பெற்று கொள்வதாக தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.