முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ வாழ்த்து
தென்காசியில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் ஆண்கள் பொதுப் பிரிவில் சங்கரன்கோவில் காந்திநகர் வவுனியா கபடி அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன்கள் கார்த்திக் ராஜா, நந்தீஸ்வரன் , திருமுருகன் ஆகியோர் தலைமையில் அந்த அணியை சேர்ந்த கபடி வீரர்கள் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களிடம் பேசிய ராஜா எம்எல்ஏ மாவட்ட அளவில் மட்டுமல்லாமல் மாநில அளவிலும் வெற்றி பெற கடுமையாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனைகள் வழங்கினார். இதில் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சரவணன், நகர விவசாய அணி ராமகிருஷ்ணன், நகர துணைச் செயலாளர் சுப்புத்தாய், ஜெயகுமார், பாலாஜி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.