அரியலூர்,டிச;11
அரியலூர் – கடலூர் மாவட்டத்தை இணைக்கும் செந்துறை வட்டம் கோட்டைக்காடு வெள்ளாற்று மேம்பால அணுகு சாலையை விரைந்து முடிக்கக்கோரி போராட்டக்குழு போராட்டம் அறிவித்தது.
இந்தநிலையில் கோட்டைக்காடு வெள்ளாற்றில் மேம்பாலம் கட்டி 4 ஆண்டுகளுக்குமேல் கடந்தும் இன்னும் இருபுறமும் அணுகு சாலை அமைத்து முழுமை பெறவில்லை. தமிழக அரசு அணுகு சாலைக்கு சுமார் ரூ. 5.5 கோடி ஒதுக்கி ஒப்பந்தப்புள்ளி விட்டு 2 ஆண்டுகளுக்குமேல் ஆகியும் பணி முழுமை பெறாத காரணத்தால் அண்மையில் பெய்த மழையில் சேவைச்சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இந்தப்பகுதி பொதுமக்களும் , மாணவர்களும் கடலூர் மாவட்டத்திற்குச் செல்ல சுமார் 14 கி.மி சுற்றிச் செல்கின்றனர்.
எனவே கோட்டைக்காடு வெள்ளாற்றில் அணுகு சாலை அமைக்க கோரி போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு கடந்த மாதங்களில் பல போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
கடலூர் — அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் மேம்பாலம் கட்டுமான நிறுவனம் திடீரென்று தங்கள் பணியை தொடங்கி நடத்தி வருகிறது. மேலும் இப்பணி தொடருமா அல்லது பாதியில் நிற்குமா? சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அரசியல் கட்சியினரின் கேள்வி?
அரியலூர் – கடலூர் மாவட்டங்கள், குன்னம் மற்றும் திட்டக்குடி தொகுதிகள் பெண்ணாடம் – செந்துறை கோட்டைக்காடு வெள்ளாற்றில் மேம்பாலம் கட்டி 4 ஆண்டுகளுக்குமேல் கடந்தும் இன்னும் இருபுறமும் அணுகு சாலை அமைத்து முழுமை பெறவில்லை.
எனவே கோட்டைக்காடு வெள்ளாற்றில் அணுகு சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த கோரி போராட்டக்குழு தலைவர்கள் நேற்று 10 ஆம் தேதி முற்பகலில் கோட்டைக்காடு வெள்ளாற்றில் ஒன்றுகூடி வருகின்ற 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கோட்டைக்காடு வெள்ளாற்றில் கண்டன முழக்கப் போராட்டம் நடத்துவது என முடிவு எடுத்துள்ளனர்.
அதன்படி போராட்டக் குழு தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கியவர்கள்
மு. ஞானமூர்த்தி, தலைவர் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு.
சுபா. இளவரசன் நிறுவனத் தலைவர் தமிழர் நீதிக்கட்சி.
கு. திருஞானம் மு. துணைப் பொதுச் செயலாளர் பாமக.
ஆடியபாதம் மு. மாவட்ட தலைவர் பாமக கடலூர் மாவட்டம்.
பாலசிங்கம் மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர். வி. சி. க. ,
எழிலரசன் ஒன்றிய செயலாளர் அதிமுக (ஓ. பி. எஸ்) அணி. ,
எ. கே. இராசேந்திரன் மாவட்டத் தலைவர். தமிழ்ப் பேரரசு கட்சி. ,
து .அருள்முருகன் மாவட்டத் தலைவர். உலகத் திருக்குறள் கூட்டமைப்பு. கடலூர் மேற்கு மாவட்டம். ,
சாந்தி ஊராட்சி மன்றத்தலைவர்ஆலததியூர் ,
செல்வ. தமிழ்ச்செல்வன் மாவட்டச் செயலாளர் த. நீ. க. ,
க. குமார், கோட்டைக்காடு,
ஆலத்தியூர் பாண்டியன், ரெங்கநாதன்,சந்திரகாசன்,வீராசாமி,ராஜா,இளையபெருமாள்,சேகர் ஆகியோர் கலந்துகொண்டு போராட்டம் நடத்துவதற்கு ஆலோசனை வழங்கினர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்