நாகர்கோவில் பிப் 21
குமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் வைத்து நடைபெற்ற (26/01/ 2025 -ம் தேதி) குடியரசு தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி மாவட்ட ஆட்சியர் கௌரவித்தார்.
இது வரவேற்கத்தக்க நல்ல விஷயம் காரணம் ஒருவரை கௌரவப்படுத்தும் போது அவர் மீண்டும் தன்னுடைய பணியில் முன்பை விட அதிகமாக முழு அக்கறையுடன் செயல்படுவார்.
ஆனால் மாவட்ட ஆட்சியர் கௌரவப்படுத்த வேண்டியவர்களின் விவரங்கள் அனைத்தும் அச்சு அடித்து 26 ஆம் தேதி காலை குடியரசு தின நிகழ்ச்சியில் முக்கிய நபர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி கௌரவித்து வந்தார். திடீரென லிஸ்டில் இடம்பெறாத
குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி ஜான் ஜெகத் பிரைட் மற்றும் கணக்கர் சுரேஷ் அலுவலகப் பணியாளர் என புதிதாக பெயர் எழுதி சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
நற்சான்றிதழ் வழங்கப்பட்ட இவர்கள் மீது பல்வேறு புகார்கள் செய்தியாளர்களாலும் மற்றவர்களாலும் அளிக்கப்பட்டு இவர்கள் உயர் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டவர்கள்.
இவர்கள் அனைவரும் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் பணியாற்றியதாக கூறப்படுகிறது.
அது இவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை அந்த வேலையில் அவர்கள் சிறப்பாக செய்யவில்லை என மாவட்ட ஆட்சியர் பல்வேறு கட்டங்களில் அவர்களைக் கடிந்து அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை தானே முன்னின்று செய்தது அனைவரும் அறிந்த ஒன்று ஆகும்.
மாவட்ட ஆட்சியர் திருவள்ளுவர் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களை அழைத்து பாராட்டி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அந்த நிகழ்வுக்கு செய்தி மக்கள் தொடர்பு துறையை சார்ந்தவர்கள் அழைக்கப்படவில்லை அப்படியானால் இவர்கள் சிறப்பாக பணி செய்யவில்லை என்று தானே அர்த்தம்.
மாவட்ட ஆட்சியரால் அன்று அழைக்கப்படாதவர்கள்
குடியரசு தின விழாவின் இறுதியில் அவசர அவசரமாக பெயர் சேர்க்கப்பட்டு( மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் இல்லாமல்) நற்சான்றிதழ் வழங்க பட வேண்டிய காரணம் என்ன. வற்புறுத்தலா? இல்லை கட்டாயமா?
இது முற்றிலும் தவறாக கொடுக்கப்பட்ட நற்சான்றிதழாகும் ஆகவே குடியரசு தின விழாவில் கடைசி நேரத்தில் பேனாவால் பெயர்களை எழுதி சான்றிதழ் வழங்க வைத்த நபர் மீதும் நடவடிக்கை எடுத்து குடியரசு தின விழாவில் வழங்கப்படும் சான்றிதழுக்கு மரியாதை கொடுத்து இவர்களுக்கு வழங்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் எனவும்,
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அனைத்தும் ஆதாரங்களுடன் முதல்வர் கவனத்திற்கும் எடுத்து செல்ல இருப்பதாகவும், இனி வரும் நாட்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க ஆட்சியரின் நடவடிக்கை ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள்.