கீழக்கரை செப் 09-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட காஞ்சிரங்குடி ஊராட்சியில் அங்கன்வாடி மற்றும் ரேஷன் கடைகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால் ஊர் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அங்கன்வாடி மற்றும் ரேஷன் கடைகள் புதிய கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்படி ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடமும் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டிடங்களுக்கு 2021 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று.அந்த பணிகள் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தது. இந்த நிலையில் பணிகள் நிறைவு பெற்று 8 மாதங்கள் ஆகியும் அங்கன்வாடி மற்றும் ரேஷன் கடை திறக்க படாமல் உள்ளது. இது தொடர்பாக காஞ்சிரங்குடியில் நடைபெற்ற ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மன்பவுல் ஹைராத் பொதுநல சங்கம் சார்பில் முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டது. இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த இரண்டு கட்டிடங்களையும் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்