ஊட்டி. மார். 01.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஹட்டி பகுதியை சேர்ந்தவர் முரளி 37. அரசு போக்குவரத்து கழக டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விமலா ராணி சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததால் இவ்வளவு நேரம் யாரிடம் பேசுகிறாய் என்று கணவர் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை தன் கணவன் முரளி மீது திடீரென பெயிண்டில் கலக்கப்படும் தின்னர் என்ற திரவத்தை ஊற்றி மனைவி விமலா ராணி தீ வைத்தார். பலத்த தீக்காயங்களுடன் சத்தமிட்டு துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் ஓடிசென்று ஊட்டி அரசு மருத்துவமனைக்கு முரளியை எடுத்துச் சென்றனர். அங்கு முரளி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன் தன் மனைவியின் நடவடிக்கை மற்றும் தன் மீது தின்னரை வீசி தீ வைத்தது குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. முரளி கொடுத்த வாக்கு மூலத்தின் படி தன் மனைவி வேறொருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் இந்த கள்ளக்காதலை தட்டி கேட்டதால் என் மீது தின்னரை ஊற்றி தீ வைத்து விட்டார். எனவே என் மனைவியையும் என் இறப்புக்கு காரணமாக இருந்த மனைவியின் கள்ளக்காதலனையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாக்குமூலத்தில் கடைசியாக தெரிவித்தார். மனைவியே கணவனை எரித்த சம்பவம் கூடலூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முரளியின் இறப்புக்கு காரணமான மனைவி விமலா ராணியும் அதே பகுதியை சேர்ந்த அவனது காதலனையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.