நாகர்கோவில், மே- 17,
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்கிறது. இதனால், வெப்பத்தின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் வரும் 19 ம் தேதி வரை கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. கனமழை எச்சரிக்கை தொடர்ந்து உயிர் சேதம் ஏற்படாதவாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நாகர்கோவில் தக்கலை பூதப்பாண்டி ஆரல்வாய் மொழி உட்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, புத்தன்அணை, முக்கடல் அனண உள்ளிட்ட அணைப் பகுதிகளிலும், ஆறுகாணி, கடையாலுமூடு, அருமனை, பனச்சமூடு, திற்பரப்பு, களியல், குலசேகரம், சுருளகோடு, கீரிப்பாறை உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்தது.இதனால், கோதையாறு, பரளியாறு உள்ளிட்ட ஆறுகளிலும், பேச்சிப்பாறை, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர் நாகர்கோவில் பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை தண்ணீரும் கலந்து வந்ததால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.