சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி 186 வது வட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்
மடிப்பாக்கம் ராம் நகர் வடக்கு பகுதியில் உள்ள எஸ்பி கிராண்ட் பேலஸில் வட்டச் செயலாளர் ஆர்.குமாரசுவாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் ஜெ.கே.மணிகண்டன் வரவேற்புரையாற்றினார். 14 வது மண்டல குழுத் தலைவர் மற்றும் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் பெருங்குடி எஸ்.வி.இரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய பகுதி செயலாளர் லயன் ச.அரவிந் ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு செயல் வீரர்கள் கூட்டத்தில் சிறப்பு உரையாற்றினார். தலைமைக் கழக தொகுதி பொறுப்பாளர் மற்றும் மாவட்டக் கழகப் பொருளாளர் வேளச்சேரி எஸ்.பாஸ்கரன் கழக ஆட்சியின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பகுதி கழகச் செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், வட்ட செயற்குழு உறுப்பினர்கள், பிற அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முகவர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.