அஞ்சுகிராமம் நவ-30
திமுக இளைஞரணி தலைவரும்,தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடபட்டு வருகிறது, ஏழைகளுக்கு நலதிட்ட உதவிகள்,திருநங்கைகள், மாற்று திரனாளிகள்,குழந்தைகள் காப்பகங்கள்,அங்கன்வாடி குழுந்தைகள் என பலருக்கும் நிதி மற்றும் உணவுகளை வழங்க உத்திரவிட்டார்.இதனையடுத்து தமிழகமெங்கும் திமுகவினர் உதவிகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில் பழவூர் குருகுல ஆதரவற்றோர் இல்லத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் மாவட்ட பிரதிநிதி சிவக்குமார் முன்னிலையில் அஞ்சுகிராமம் பேரூராட்சி துணைத் தலைவர் காந்திராஜ் இனிப்பு ,கல்வி உபகரணங்கள்,நலதிட்டங்களை வழங்கினார் நிகழ்ச்சியில். மனோபா,ஒன்றிய பிரிதிநிதி ராஜேந்திரன், ரஜீஷ் கிளை கழக செயலாளர், முத்துக்குமார் மற்றும் திமுக பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.