ஊட்டி.டிச.19
சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் 45 பயனாளிகளுக்கு ரூபாய் 3,80,210 நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார்
நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா கொண்டாடப்பட்டது
இதில் 45 பயனாளிகளுக்கு ரூபாய் 3,80,210 நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார்
மேலும் இதில் நீலகிரி மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கத்தின் கௌரவ செயலாளர் மற்றும் கருந்துறரை வழங்கிய நீலகிரி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் கௌரவ செயலாளர் அவர்களுக்கு நன்றியை தெரிவிக்கப்பட்டது.
இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.