திருமங்கலம்
டிச 01
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் ரோஸ் அரிமா சங்கம் இணைந்து நடத்திய “ஸ்வச் பாரத்” தூய்மை இந்தியா பாரத திட்டத்தின் கீழ் அரசு ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள். வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ரோஸ் அரிமா சங்கத்தின் தலைவர் லயன் சுந்தரம் தலைமை தாங்கினார், அரிமா சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், திருமங்கலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராம்குமார் முன்னிலை வகித்தார்,
பட்டயத்தலைவர் அனிதா V.பால்ராஜ் அனைவரையும் வரவேற்றார், சேவை திட்ட இயக்குனர் மணிகண்டன், செயலாளர் விஜய பாண்டி சங்க ஒருங்கிணைப்பாளர் சிவராஜன், உடனடி முன்னாள் தலைவர் வைரமுத்து, சுரேஷ்குமார்,அருண் குமார்,கணேசன், முத்துக்குமார் சுந்தரபாண்டி குருநாதஈஸ்வரன், சாமுவேல் கார்த்திகேயன், குமார், பிரமோத்குமார் மற்றும் சமூக ஆர்வலர் ஜாகிர் உசேன். ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவில் பழனிமுத்துகுமரன் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார