தஞ்சாவூர் ஏப்ரல் 16.
தஞ்சாவூரில் நடைபெற்ற சமத்துவ நாள்விழாவில்1010 பேருக்கு ரூபாய் புள்ளி 65 கோடியில் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் நலத்துறை சார்பில் சமத்துவ நாள் விழா சென்னையில் நடந்தது இதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கினார் இதை தொடர்ந்து தஞ்சாவூரில் நடந்த சமத்துவ நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். எம்பிக்கள் கல்யாணசுந்தரம், முரசொலி, எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், மேயர் சண். ராமநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மாவட்ட வருவாய் அதிகாரி தியாகராஜன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் 1,010 பேருக்கு ரூபாயை 6 கோடியே 65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி களை வழங்கினார். இதில் இலவச தையல் இயந்திரம், கறவை மாடு மற்றும் சுயதொழில் தொடங்க ஆணை, இணையவழி பட்டா, ரேஷன் கார்டு, தூய்மை பணியாள ர்களுக்கு சீருடை மற்றும் பணி பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழாவில் மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் நல அலுவலர் ரவிச்சந்திரன் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, தாட்கோ மேலாளர் தியாகராஜன், மாவட்ட சமூக நல அலுவலர்லதா, மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்
6.65 கோடி யில் நலத்திட்ட உதவிகள்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics