தஞ்சாவூர் ஜூலை 31.
தஞ்சாவூர் மாவட்ட பள்ளி கல்வி துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் முனிசிபல் காலனி யில்உள்ள மாநகராட்சி உயர்நிலை ப்பள்ளியில் நடந்த விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங் கா பங்கஜம் தலைமை தாங்கினா ர்.எம் எல் ஏக்கள் துரை சந்திரசேகர ன், டி கே ஜி நீலமேகம், மேயர் சண்.ராமநாதன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவி உஷா புண்ணிய மூர்த்தி ,துனை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னி லை வகித்தனர்.
விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி னார் .அதன்படி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ 1 லட்சத்து 10 ஆயிரத்து 217 பேருக்கு சீருடைகளு ம் ,142 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 17 ஆயிரத்து 834 மாணவ மாணவிக்கு ரூபாய் 8 லட்சத்து 59 ஆயிரத்து 65 ஆயிரம் 880 மதிப்பெலான விலை யில்லா சைக்கிள்களும் வழங்கி னார்.
மேலும் அரசு தொடக்க நடுநிலை ப்பள்ளிகளில் பணி புரியும் 1 ஆம் முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு கற்பி க்கும் 1,147 அரசு தொடக்க நடுநி லைப் பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து815 ஆசிரியர்களுக்கு ரூபாய் 3 கோடியை 58 லட்சத்து 34 ஆயிரத்து 950 மதிப்பிலான கையடக்க கணினி வழங்கினார்.
விழாவில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் கல்லூரி கல்வி அதிகாரிகள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .நிறைவாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன் குமார் நன்றி கூறினார்.
இதைத்தொடர்ந்து பள்ளி கல்வி த்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களி டம் கூறியதாவது:
டிக்டோ ஜாக்அமைப்பினர் (ஆசிரியர்கள் அமைப்பு )13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ள நிலையி ல், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம் .இதில் 5 அல்லது 6 கோரிக்கைகள் நிறைவேற்றுவதற் கான வழிவகைகளை மேற் கொண் டு வருகிறோம் .
மேலும் முதன்மை செயலரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் அப்போது நிதி சார்ந்த கோரிக்கை கள், நிதி சாராத கோரிக்கைகள் என்னென்ன இருக்கிறது என்பதை அறிந்து அவர்களது உணர்வுகளு க்கு மதிப்பளிக்கும் வகையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப் படும்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தி ற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி குறித்து மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான நேரில் சந்தித்து வலியுறுத்து உள்ளோம் ஆண்டுதோறும் வழங்கக்கூடிய இந்த நிதியை பல காரணங்கள் கூறி ஏன் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், ஏறத்தாழ 60 இலட்சம் மாணவர்களை மனதில் வைத்து உடனடியாக நிதிய விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எடுத்துள்ளோம் .மத்திய அரசு அதிகாரிகளுடன் தமிழக அரசு அதிகாரிகள் கலந்து பேசி சொல்லு மாறு, அதற்கு முயற்சி எடுப்பதாக வும் மத்திய மந்திரி கூறினாலும் முறைப்படி பதில் ஏதும் வரவில்லை மத்திய மந்திரியிடம் என்ன பதில் வருகிறது என்பதை பார்த்து தமிழக அமைச்சர் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.