திருமங்கலம் டிச 05
மதுரை மாவட்டம் திருமங்கலம் தெற்கு தெரு பகுதியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் வழங்கினார் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருமங்கலம் கலைஞர் திடலில் திமுக கொடியை ஏற்றி வைத்து அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.