சென்னை, ஜன- 06, திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு “ஏன் வேண்டும் திமுக? ” கொள்கை விளக்கக் கூட்டம் தி.நகர் மேற்குபகுதி 132 அ வட்டம் சார்பாக கோடம்பாக்கம் அஞ்சுகம் சமூக நல கூடத்தில் நடைபெற்றது. தி.நகர் பகுதியில் 5000 பேருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் தொடர் நிகழ்வின் ஒரு பகுதியாக இங்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளரும் மயிலை சட்ட மன்றஉறுப்பினருமான மயிலை த.வேலு, தி.நகர் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி, தொகுதி பார்வையாளர் பத்மப்ரியா, தி.நகர் மேற்கு பகுதி செயலாளர் கே. ஏழுமலை, 132 வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திகா பாஸ்கர், 132 அ வட்டச் செயலாளர் கே.எஸ். வெல்டிங் ராஜா, சென்னை தென்மேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மோனிஷா கருணாநிதி, மற்றும் மாவட்ட, பகுதி,வட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட மகளிரணி, பிற அணியினர் கலந்து கொண்டனர்.