தென்காசி வடக்கு மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அம்மா பேரவை, அண்ணா தொழிற்சங்கம், மருத்துவ அணி ஆகிய அணிகளின் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்டங்களை மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமையில், அஇஅதிமுக திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் உதயகுமார் வழங்கினார்
தென்காசி வடக்கு மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட மருத்துவரணி மாவட்ட செயலாளர் டாக்டர் திலீபன் ஏற்பாட்டில் அம்மா பிறந்தநாள் அன்று சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் பிறந்த நான்கு குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமையில், கழக மகளிரணி துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜலெட்சுமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சுப்பையா பாண்டியன் ,துணை செயலாளர் கண்ணன் என்ற ராஜீ, கழக அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் கந்தசாமி பாண்டியன், திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முனைவர் சிவ ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் மதுரை திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சருமான உதயகுமார் வழங்கினார் மேலும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு துணி துவைக்கும் இயந்திரம் ( வாஷிங்மெஷின்), கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு குளிர்சாதன பெட்டி வழங்கிய அவர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராமசாமி என்ற ரவி ஏற்பாட்டில் சங்கரன்கோவில் மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள் தலா 2 1/2 கிலோ வீதம் சுமார் 200 பேருக்கு வழங்கினார் பின்னர் செங்கோட்டை மேல ரத வீதியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 700 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகளை வழங்கினார் நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த அஇஅதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.