மார்த்தாண்டம், டிச- 19
மார்த்தாண்டம் அருகே சாங்கையை தலைமை இடமாகக் கொண்டு பால்மா மக்கள் அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இதன் அங்கமாக விளங்கும் பால்மா மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் ‘பரிவும் பகிரவும்’ என்ற திட்டம் வழியாக 42 பாதிப்பு நிலை இளம் சிறார்களுக்கு பராமரிப்பு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் அகில உலக எயிட்ஸ் தினத்தை அனுசரிக்கும் விதமாக இளஞ்சிறார்களுக்கு ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான புத்தாடைகள், பரிசு பொருள்கள், கல்விக்கான நிதியுதவிகள், சத்தான உணவு தானியங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பு தலைவர் ஐடா குளோறி பாய் தலைமை வகித்தார். செயல் இயக்குனர் ஜேக்கப் ஆபிரகாம் முன்னிலையில் செயலாளர் வஸ்திஜாய் வரவேற்றார். இயக்குனர் ஜோதி விமலாபாய் அரக்கை சமர்ப்பித்தார். பால்மா மக்கள் அமைப்புகளின் இயக்குனர் செல்லன் திட்ட விளக்கம் அளித்தார்.
குளச்சல் டாக்டர் பினுலால் சிங், தொழிலதிபர் ராஜ வர்கீஸ், பால்மா சட்ட ஆலோசகர் சுரேஷ், உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவர் பமிலா ஆகியோர் கலந்து கொண்டு நல உதவிகள் வழங்கினார்கள்.
மேலும் 10 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற பாதிப்பு நிலை மாணவர்களுக்கான ஊக்க பரிசு, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பசு மாடு கன்றுகளும் வழங்கப்பட்டது. இறுதியில் குமரி மாவட்ட எச் ஐ வி பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவர் ஆண்ட்ரூஸ் ஏற்புரை நிகழ்த்தினார்.