திருவாரூர் பிப்ரவரி 3,
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், மாற்றத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 70 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.48 லட்சத்து 57 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார், மேலும் மன்னார்குடி வட்டம், காரிக்கோட்டை ஊராட்சியில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட சமுதாய கூடம் மற்றும் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நியாய விலைக்கடையினையும் திறந்து வைத்தார்கள்.
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ, முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில்
மக்களோடு, மக்களாக பயணிக்கும் ஒரு மாபெரும் முதலமைச்சராக நமது தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கிறார்கள். எந்தவொரு காலகட்டத்திலும் தமிழ்நாடு முதலமைச்சர் மன்னார்குடி தொகுதிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள். எனவே நாம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றும் நன்றி கடனாக இருப்போம்.
தற்பொழுது, இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டுள்ள சமுதாய கூடமானது, சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்டிருந்தாலும், மேலும், கிராமத்தில் உள்ள அனைவராலும் கூடுதல் நிதி திரட்டப்பட்டு இச்சமுதாய கூடம் கட்டப்பட்டுள்ளது. சமுதாய கூடம் கட்ட நன்கொடை வழங்கிய கிராமத்திற்கும், கிராம மக்கள் அனைவருக்கும் எனது நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கிராமப்புறச்சாலை பணிகள் அனைத்தும் நிறைவுறும் வகையில் உள்ளது. மன்னார்குடியில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இளைஞர்களுக்கும், மகளிர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிப்பது குறித்த நடவடிக்கையில் நமது அரசு செயல்பட்டு வருகிறது என அமைச்சர் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், திடக்கழிவு மேலாண்மையில் தன்னிறைவு பெறுவதற்காக கிராமப்புறங்களில் குப்பைகளை விரைந்து கொண்டு செல்வதற்கு ஏதுவாக மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு 24 எண்ணிக்கையிலான மின்கலன் மூலம் இயங்கும் வண்டிகளை அமைச்சர் வழங்கினார்கள்.
முன்னதாக, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், கோட்டூர் வட்டாரம், கண்டமங்கலம் ஊராட்சி, சேரி கிராமத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லம் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லத்திற்கு புதிய அரசு கட்டடம் கட்டுவதற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 13 பயனாளிகளுக்கு விபத்து இறப்பு நிவாரண தொகைக்கான ஆணையினையும், மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாரிய கல்வி உதவித்தொகை 7 நபர்களுக்கும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவருக்கான தண்ணீர் படுக்கை பெறுவதற்கான நிதியுதவி 7 நபர்களுக்கும், பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி 43 நபர்களுக்கும் என மொத்தம் 70 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.48 லட்சத்து 57 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட அமைச்சர் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மன்னார்குடி வட்டாட்சியர் கார்த்திக், ஒன்றிய பொறியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.