வேலூர்=25
வேலூர் மாவட்டத்தில் 80 க்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் பாரம்பரியமான கைத்தறி நெசவுத் தொழில் நடைபெறுகின்ற இடங்களில் குடியாத்தம் பிரதான பங்கினை வகித்து வருகிறது.அண்மைக்காலமாக தமிழ்நாடு அளவில் சிறந்த நெசவாளர்களுக்கான பரிசினை வென்ற நெசவாளர்களும் இங்கு உள்ளனர். தமிழ்நாட்டின் முதலமைச்சசரும் பரிசினை வழங்கி கௌரவித்திருக்கிறார்.
. கூட்டுறவு நெசவாளர் சங்கத்தில் தறி நெய்து வரும் நெசவாளர்களுக்கான கூலி பட்டுவாடா இனிமேல் வங்கிகள் மூலம் பரிவர்த்தனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. காசோலையாக கொடுத்தால் வாரத்தில் மூன்று நாட்கள் வங்கிகளுக்கு
சென்று மணி கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு . ₹750 ரூபாய் கூலித்தொகை பெறுவதற்கு வேலை வருவாய் இழப்பு போக்குவரத்து செலவு ஏற்படும் ஆதலால் சில மணி நேரம் செலவிட்டு கூலி வாங்கி வருவது நெசவாளர்களுக்கு வேலை நேரம் இழப்பு ஏற்படுவதாக இருக்கும் எனவே நெசவாளர்களுக்கு. தற்போது கூலி வழங்கும் முறையே சரியானதாக இருக்கிறது மேலும் கிராமம் பகுதிகளில் வசிக்கும் நெசவாளர்களுக்கு மிகப்பெரும் மன உளைச்சலை கொடுக்கும். இதனை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும்.நெசவாளர்களுக்கான கூலிப்பட்டுவாடா வங்கிப் பரிவர்த்தனை மூலம் செய்வது தொடர்பான உத்தரவை திரும்பப் பெற வேண்டும். என்றும்
நிலுவையில் உள்ள ரிபேட் மானியத் தொகையை விடுவிக்க வேண்டும்.ரிபேட் மானியத் தொகையின் உச்சவரம்பு மாற்றப்பட வேண்டும்.
என்றும் புதிய நீதி கட்சியின் சார்பில் குடியாத்தம் நகரச் செயலாளர் எஸ். ரமேஷ் கோரிக்கை வைத்துள்ளார்..