நாகர்கோவில் ஜூலை 14
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் ஆயுதப்படை காவலர்களுக்கு வாரந்திர கவாத்து கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நேற்று நடைபெற்றது.
இதில் காவலர்களுக்கு ஆயுதங்களின் செயல்பாடு குறித்தும் அதனை சிறப்பாக கையாள்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள்.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் குற்றப்பிரிவு (ஆயுதப்படை பொறுப்பு) மற்றும் செல்லசுவாமி ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.