கன்னியாகுமரி ஜூலை 5
நாம் தமிழர் கட்சி கிள்ளியூர் மேற்கு தொகுதி கொல்லங்கோடு நகர கிழக்கு செயலாளர் ஷாஜி, தலைமையில் முன்னாள் தொகுதி தலைவர் சிவச்சந்திரன், முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 30 வது வார்டு ஏலாக்கரை, பாணந்தோப்பு சாலையில் சில மாதங்களாக தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற கோரியும், சாலையில் மழைநீர் தேங்காமல் நிரந்தரமாக சாலையை உயர்த்தி இனி வரும் நாட்களில் மழை நீர் தேங்காமல் சாலையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சாலை அமைக்க கோரி கொல்லங்கோடு நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து வார்டு உறுப்பினரை நேரில் சந்தித்து உடனடியாக முன்னுரிமை அடிப்படையில் சாலையில் நிரந்தரமாக மழை நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு அளித்தனர்.