சிவகங்கை மாவட்டம், எப்.-20
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கண்டரமாணிக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறை, வேளாண் பொறியியல்துறை மற்றும் நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள நீர்நிலை சீரமைப்புப் பணியினை, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தலைமையில், நன்கொடையாளர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உடன் செயற்பொறியாளர்கள் சிவபிரபாகரன் (நீர்வளத்துறை), பாஸ்கரன் (வேளாண் பொறியியல் துறை), உதவி செயற்பொறியாளர் வீரமுத்து (நீர்வளத்துறை), உதவி பொறியாளர்கள் பிரகாஷ் (நீர்வளத்துறை), சுப்பிரமணியன் (வேளாண் பொறியியல் துறை), கருப்பையா ராமாயி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஏ.எல்.கருப்பையா, அறங்காவலர் கேஆர்.மணிகண்டன், சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி நிர்வாக இயக்குநர் சேதுகுமணன், நீர் நிலம் பாதுகாப்பு இயக்க நிர்வாகி கிருஷ்ணன், வட்டாட்சியர்கள் தங்கமணி (பேரிடர் மேலாண்மை), மாணிக்கவாசகம் (திருப்பத்தூர்) மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.