கிருஷ்ணகிரி- ஜூலை-11-கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தின் வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய் மற்றும் பிரிவு கால்வாய்களில் 8,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 120 நாட்களுக்கு முதல்போக விவசாய பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் .கே.கோபிநாத் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்காக விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று 8,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 10.07.2024 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தின் இடதுபுற பிரதான கால்வாய் மற்றும் பிரிவு கால்வாய்கள் மூலம் 5918 ஏக்கரும், வலதுபுற பிரதான கால்வாய் மூலம் 2082 ஏக்கர் என மொத்தம் 8000 ஏக்கர் புன்செய் நிலங்கள் பயனடைகின்றன.
இதன் மூலம் ஓசூர் மற்றும் சூளகிரி வட்டத்திலுள்ள, தட்டகானப்பள்ளி, பூதிநத்தம், பெத்த முத்தாளி, முத்தாளி, அட்டூர், கதிரேப்பள்ளி, மாரசந்திரம், கொத்தூர், மோரனப்பள்ளி, தொரப்பள்ளி, திருச்சிப்பள்ளி, காமன்தொட்டி, தின்னூர், சுபகிரி, கோனேரிப்பள்ளி, சின்னகொல்லு, பெத்தகொல்லு, சாமனப்பள்ளி, சென்னத்தூர், அட்டகுறுக்கி, நல்லகானகொத்தப்பள்ளி மற்றும் மார்த்தாண்டப்பள்ளி ஆகிய 22 ஊராட்சிகளில் உள்ள 8,000 ஏக்கர் புன்செய் நிலங்கள் பாசன வசதி பெறும்.
அணையின் நீர் இருப்பு மற்றும் அணைக்கு வரும் நீர் வரத்து ஆகியவைகளை கருத்தில் கொண்டு, 120 நாட்களுக்கு சுழற்சி முறையில், முதல் 10 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்தும் அடுத்த 5 நாட்கள் நிறுத்தியும் 8 நனைப்புகளுக்கு நீர் வழங்கப்படும். தண்ணீர் திறந்துவிடப்படும் காலங்களில் இரு கால்வாய்களிலும் வலதுபுற பிரதான கால்வாயில் விடப்படும் நீரின் அளவு:26 க.அடி/வினாடி மற்றும் இடதுபுற பிரதான கால்வாயில் விடப்படும் நீரின் அளவு:62 க.அடி/வினாடி) என மொத்தம் 88 கன அடி / வினாடி வீதம் திறந்து விடப்படும்.அணையின் மொத்த நீர்மட்டம் 44.28 அடி, அணையின் முழு கொள்ளளவு 481 அணையின் இன்றைய நீர்மட்டம் 42.31 அடி, அணையின் இன்றைய கொள்ளளவு 406.29 மி.க.அடி ஆகும்.
எனவே, விவசாய பெருமக்கள் நீர் பங்கீட்டில் நீர்வளத்துறையினருடன் ஒத்துழைத்து, நீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக விளைச்சல் பெறும் நோக்கத்துடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை செயற்பொறியாளர் .செந்தில்குமார், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் .மோகன்ராஜ், உதவி பொறியாளர்கள் .பொன்னிவளவன், .ராதிகா, வட்டாட்சியர் .விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.பாலாஜி, .சிராஜ், விவசாய சங்க பிரதிநிதி .நாராயணசாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.