தஞ்சாவூர் ஜூலை 30.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து தஞ்சாவூரில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆலோசனை நடத்தினார்.
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள காவிரி நீரை ஆடிப்பெருக்கு விழாவின்போது பாதுகாப்பாக கொண்டாடுவது, நீர்நிலை குளங்களில் தண்ணீரை சேமிப்பது மற்றும் அதிகப்படியாக தண்ணீர் வரும் போது மேற்கொள் ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விவசாயிக ளுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். மாவட்ட த்தில் ஏரி, குளங்கள் நீர் இருப்பு விவரம் குறித்தும், கொள்ளிட கரையோர கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பணி குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் விவசாயிகள் கால்நடை கள் பாதுகாப்பாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டது .நகராட்சிகள், பேரூராட்சிகள், வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை, தீயணைப்பு துறை, குடிநீர் வடிகால் வாரியம் ,மின்சாரத்துறை சுகாதார த்துறை மற்றும் அனைத்து அலுவலர்களுடன் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். கூட்டத்தில் வருவாய் அலுவலர் தியாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.