அரியலூர், மே:22
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுக்கா, ஆலத்தியூர், முள்ளுக்குறிச்சி, தெத்தேரிக்கு இடைபட்ட பகுதியில் காலாவதியாகி கைவிடபட்ட ராம்கோ சிமெண்ட் மற்றும் இந்தியா சிமெண்ட் ஆலை சுண்ணாம்புகல் சுரங்கத்திலிருந்து ஆலை நிர்வாகம் நிலத்தடி நீரை வெளியேற்ற ராட்சத மோட்டார் பம்ப் மற்றும் பைப் லைன் அமைத்து நீரை உறிஞ்சி வருகின்றனர்.
இதனால் அருகில் உள்ள வெள்ளாறு தடுப்பனையிலும் தண்ணீர் வற்றி சுற்றுபுற கிராம பகுதியில் உள்ள மக்கள் நீர் இல்லாமல் தவிக்கும் சூழல் வரக்கூடும்.அதேபோல் வயல்களில் போர்வெல்கள் நீர் இன்றி வற்றி குடிநீர் மற்றும் விவசாய ஆதாரம் பாதிக்கபடும் என விவசாயிகள் குற்றச்சாட்டாக கூறுகிறனர்.
அரியலூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சிமெண்ட் ஆலைகளின் காலாவதியான சுரங்கத்தில் நீர் எடுக்கும் முடிவாக பைப் லைன் அமைத்து ராட்சத மோட்டார் பம்ப வைத்து நீரை சுரண்ட நினைக்கும் சிமெண்ட் ஆலைகள் மக்களின் வாழ்வதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் சிமெண்ட் ஆலைகளை கண்டிக்கிறோம். எனவே கிராம பஞ்சாயத்துகளில் இதற்கான தனி தீர்மானம் வைத்து தடை செய்து சுரங்க பகுதியை சுற்றி உள்ள கிராம மக்களின் நீராதாரத்தை பாதுகாக்க வேண்டுகிறோம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.