தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்க மாநிலத் தலைவர் முனைவர் க. திருமுருகன் செய்தியாளரிடம் தெரிவித்தது
தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் சார்பாக, வருகின்ற டிசம்பர் 11 நம் தேதி நடத்தப்படவுள்ள எந்த ஒரு ஆர்ப்பாட்டத்திற்கும் அல்லது போராட்டத்திற்கும் பங்கேற்கப் போவதில்லை என்பதை உறுதியாக தெரிவித்துள்ளார். இதற்கான முக்கிய காரணங்களாக 1. உணவுப் பொருளாதார மையத்திலிருந்து மாறியுள்ள நோக்கம் – போராட்டம் உணவுப் பொருள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தாமல், பல இடங்களில் நிர்வாக அழுத்தத்தால் பெயரளவுக்கு மட்டும்
நடத்தப்படுகிறது. 2.வியாபாரிகளின் நலனில் குறைந்த கவனம் – இவ்விதமான போராட்டங்கள் உண்மையில் வியாபாரிகளின் நலனை முன்னிலைப்படுத்தாததோடு, அவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தையும் கொண்டதல்ல. 3.மக்களின் ஆதரவை இழக்கும் நடவடிக்கைகள் – கடந்த நவம்பர் 29-ம் தேதி நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தின் நோக்கம் பலருக்கும் தெளிவாக விளக்கப்படவில்லை. அப்போது எதற்காக போராட்டம்.? என்று கேள்வி எழுந்தவர்கள், இப்போதும் ஏன் ஆர்ப்பாட்டம்.? என கேட்கும் சூழலில் இருக்கிறார்கள். ஒன்றும் புரியவில்லை அரசியலோ அரசியல்
சங்கத்தின் வழிகாட்டுதலாக செயல்படும் போது எங்களுக்கு மதம் வேண்டாம், அரசியல் வேண்டாம், வியாபாரிகளின் நலன் மட்டும் வேண்டும் என்பதே எங்கள் அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டும். நமது நடவடிக்கைகள் வலுவான வியாபார அமைப்புகளை உருவாக்கும் நோக்கத்தில், உணவுப் பொருளாதாரத்தை வளர்க்கும் வழிகளில் திசை மாறாமல் இருக்க வேண்டும்.யாருடைய அழுத்தத்திற்கும் உள்ளடங்காமல், உண்மையான வியாபாரிகளின் பிரச்சனைகளை தீர்க்கத் தயாராக நாம் இருக்க வேண்டும். ஆகையால், சமுதாய நலனில் தெளிவான கோரிக்கைகள் இல்லாமல் நடத்தப்படும் போராட்டங்களுக்கு எங்கள் சங்கம் முழுமையாக புறக்கணிப்பதை இத்தருணத்தில் உறுதியாக அறிவிக்கின்றேன் என்று செய்தியாளரிடம் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்க மாநிலத் தலைவர் முனைவர். திருமுருகன் தெரிவித்துள்ளார்.