சுசீந்திரம்.பிப்.28
நாகர்கோவில் அருகே உள்ள கரியமாணிக்கபுரம் பகுதியில் வீணாகும் குடிநீர்
நாகர்கோவில் மாநகராட்சி 26 வது வார்டு பகுதியில் உள்ள கன்னி செல்வ விநாயகர் தெருவில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் குழாய் உடைத்து தண்ணீர் தெருவோடு பாய்ந்து குளம் போல தேங்கியுள்ளது இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே இங்குள்ள மக்களுக்கு குடிநீரும் சரியாக கிடைக்கவில்லை இதனால் சுகாதாரக் கேடும் ஏற்பட்டுள்ளது மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் குழாய் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களுக்கு வழங்கப்படுகின்ற குடிநீரை வீணாக்காமல் சரி செய்து தரும்படி சுற்றுவட்டார பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்