சென்னை, செப்டம்பர்- 28
நுரையீரல் மற்றும் இதய ஆரோக்கியம் மீது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கோடு 5 கி.மீ தூர வாக்கத்தான் நிகழ்ச்சி சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் நடைபெற்றது.
உலகம் எங்கும் செப்டம்பர் 25 மற்றும் 29 ஆகிய தேதிகளில் முறையே அனுசரிக்கப்படும் உலக நுரையீரல் தினம் மற்றும் உலக இதய தினம் ஆகியவற்றையொட்டி நடத்தப்படும் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .
மேலும் ரேலா மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி, மருத்துவ இயக்குனர் டாக்டர் .கௌதமன், இதய அறிவியல் மையத்தின் இயக்குனர் மற்றும் முதுநிலை மருத்துவர் டாக்டர் ஸ்ரீநாத் விஜய சேகரன், மற்றும் நுரையீரல்சிறப்பு மருந்துவர் ஐஸ்வர்யா ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் தாம்பரம் மாநகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடக்க வைத்தார் .
இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் இளங்குமரன் கலியமூர்த்தி, ஸ்ரீநாத் விஜயசேகரன், டாக்டர் ஐஸ்வர்யா ராஜ்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது என்ற குறிக்கோளையும் கடந்து
நோய்கள் வராமல் தடுப்பது என்ற விழிப்புணர்வு அளிக்கும் பொறுப்பும், பெரும் பங்கும் மருத்துமனைக்கு உண்டு.
இதற்காக உடல் நலன் தொடர்பான சர்வதேச தினங்கள் அனுசரிப்பையொட்டி வாக்கத்தான் மற்றும் பல்வேறு நிகழ்வுகளை ரேலா மருத்துவமனை மேற்கொள்கிறது
உலக அளவில் நோய்கள் பாதிப்பு நிலை மற்றும் உயிர் பலி ஏற்படுவதற்கு இதயம் மற்றும் நுரையீரல் நோய்கள் முதல் காரணமாக இருப்பதால் அவற்றின் ஆரோக்கியம் மீது குறிப்பாக கவனம் செலுத்துகிறோம். இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்கள் உருவாவதற்கு சுற்றுச்சூழலும் வாழ்க்கை முறையும் முதல் காரணமாக இருப்பதால் தூய்மையான சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பொதுமக்கள் பின்பற்றுவதற்கு முக்கியத்துவம் தருகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் 17.9 மில்லியன் என்ற மதிப்பிடப்பட்டுள்ள இறப்புகளுக்கான காரணங்களாக இதய நாள நோய்கள் இருப்பதால் உலக அளவில் இறப்புக்கான முதன்மை காரணமாக அது இருக்கிறது . இந்தியாவில் மட்டும் ஏற்படும் மொத்த இறப்புகளில் 25% இதய நோய் காரணமாக இருக்கிறது . இதில் இளம் வயதினரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மருத்துவ செயல்முறைகள் ஸ்டெண்ட்கள், ரோபோ உதவியுடன் கூடிய அறுவை சிகிச்சைகள் முறைகள் மூலம் முன்னேற்றம் நம் காண முடியும். மேலும்
உட்பட மருத்துவ தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சமீபத்தில் ஆண்டுகளில் நோயாளிகளுக்கென சிகிச்சை பலன்களை பெரிதும் மேம்படுத்தி இருக்கின்றன எனினும் இதய நாள நோய்களிலிருந்து விடுபட ஆரோக்கியமான சத்தான உணவு முறை, நடைபயிற்சி, உடற்பயிற்சி உடலுழைப்பு வழியாக நமது உடல் நலத்தை பாதுகாக்கலாம் என்றனர்.