ராமநாதபுரம், ஜன.26-
தானம் அறக்கட்டளை இராமநாதபுரம் சார்பில் வாக்கத்தான் 2025 வளர்ச்சிக்காக ஒன்றிணைவோம் என்ற கருப்பொருளில் வாக்கத்தான் எனும் நடை பயணம் நடைபெற்றது.
வாக்கத்தான் -2025 நடைபயணம்
ராமநாதபுரம்
அரண்மனையில் இருந்து மதுரை ரோடு NSP திருமண மஹால் வரை நடைபெற்றது. இந்த வாக்கத்தான் நடை பயண நிகழ்வை மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு கொடி அசைத்து துவக்கி வைத்தார் .
வாக்கத்தான் நடை பயணத்தில் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து மகளிர் குழுக்கள் ஆண்கள் குழுக்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டு விழிப்புணர்வு நடை பயணத்தில் பங்கேற்றனர். இந்த நடைபயணம் அரண்மனையில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மதுரை ரோடு என் எஸ் பி மஹாலில் நிறைவு பெற்றது.
அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாக கனரா வங்கியின் முதன்மை மேலாளர் பிரம்மராஜூலு மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் அசோக் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். சுமார் 1000 பேர் இதில் கலந்து கொண்டனர். ஒட்டுமொத்த நிகழ்வுகளை
தானம் அறக்கட்டளை மண்டல ஒருங்கிணைப்பாளர்
செல்வ பாண்டியன், மண்டல தலைமையில் அறக்கட்டளை தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.