தெலுங்கானா புதுச்சேரி முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பு
சங்கரன் கோவிலில் வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் சார்பில் சென்னை ஷரத்தா மானு பவுண்டேஷன் இணைந்து நடைபெற்ற பட்டதாரி இல்லத்தரசிகளுக்கு இலவச வேலை வாய்ப்பு பயிற்சி துவக்க விழா மற்றும் வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் அங்கீகார விழா நடைபெற்றது விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தெலுங்கானா புதுச்சேரி முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஷோகோ கார்பரேஷன் சிஇஒ ஸ்ரீதர் வேம்பு கலந்து கொண்டனர் சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் சார்பில் பட்டாசு வெடித்து தாரை தப்பட்ட ம் முழங்க பூங்கொத்து வழங்கி சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது நிகழ்ச்சியில் வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் சேவையை தமிழிசை பாராட்டி பேசினார் மேலும் தமிழக முழுவதும் வாய்ஸ் ஆப் பவுண்டேஷன் பணி சிறக்க வாழ்த்துக்கள் கூறினார் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் விருந்தினர்கள் ஷோகோ கார்ப்பரேஷன் சி இ ஓ ஸ்ரீதர் வேம்பு சென்னை ஷரத்தா மானு பவுண்டேஷன் நிறுவன ர் மதுமதி நாராயண ன் ஆகியோருக்கும் வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் சார்பில் நிறுவனர் ஆனந்தன் அய்யா சாமி நினைவுப் பரிசுகள் வழங்கினார் ஷோகோ கார்ப்பரேஷன் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு சென்னை ஷரத்தா மானு பவுண்டேஷன் நிறுவனர் மதுமதி நாராயணன் வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் அய்யா சாமி, சமுத்திரா செந்தில், ஆகியோர் உரையாற்றினார்கள் மற்றும் மீனா, சிதம்பரம் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை காவியா விஸ்வபிரியா தொகுத்து வழங்கினர் ஏற்பாடுகளை வாய்ஸ் ஆப் பவுண்டேஷன் தமிழ்நாடு நிறுவனர் ஆனந்தன் அய்யா சாமி ஆலோசனைப்படி பவுண்டேஷன் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தன ர் முடிவில் பவுண்டேஷன் தலைமை நிர்வாக அதிகாரி காருண்யா குணவதி நன்றி கூறினார்.