ஸ்ரீவில்லிபுத்தூர்; கலசலிங்கம் பல்கலையில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை, டிஎஸ்டி எஸ்இஆர்பி , புது டில்லி நிதியுதவி மற்றும் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் செமி கண்டக்டர் அசோசியேஷன் (ஐஇஎஸ்ஏ), புது டில்லி, ஆதரவுடன், “விஎல்எஸ்ஐ மற்றும் தகவல் செயலாக்கத்தில் நிலையான பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு -2024 வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன், தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த், துணைவேந்தர் முனைவர்
எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
டீன் டாக்டர் பி.சிவக்குமார் வரவேற்று பேசினார்.
துறை ஆராய்ச்சி செயல்பாடுகள் குறித்து, துறைத் தலைவர் முனைவர் ஏ.முத்துக்குமார் விளக்கினார்.டாக்டர். ஷஷி காந்த் தர்கர், இரண்டு நாள் மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பற்றி விவரித்தார், மேலும் அவர் மாநாட்டில் மொத்தம் 250 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படும் என்று கூறினார் மற்றும் தொழிற்சாலை ஸ்பான்சர்கள், மேத்ஒர்க்ஸ், பி2எப் எஸ்இம்ஐ , ஐசி வடிவமைப்பு, ஃபெர்மியோனிக் மற்றும் எல்ஐஎன் – எஸ்இம்ஐ ஆகியவற்றைக் குறிப்பிட்டார்.
ஆராய்ச்சி துறை இயக்குநர் முனைவர் எம். பள்ளிகொண்ட ராஜசேகரன், தலைமை விருந்தினர்,டெசால்வ் ,
செமி கண்டக்டர் அசோசியேஷன் தலைவர்
முனைவர் வி.வீரப்பன் மற்றும் டாக்டர். நிஷு குப்தா, பின்லாந்தின் விஐடி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி, திரு. சேத்தன். அரவிந்த் பாட்டீல், அரிசோனா, அமெரிக்கா, டாக்டர் விஷால் ஷர்மா, ஸ்டாஃப் இன்ஜினியர், மைக்ரோன் டெக்னாலஜி, ஹைதராபாத், ரஞ்சித் குமார், இயக்குனர், பிஆர்எஸ் செமிகான், சென்னை, பி.ஆர். சிவக்குமார், நிறுவனர் , மேவன் சிலிக்கான், பிரதீப் சிமலாபதி, இயக்குனர், மார்க்யூ செமிகண்டக்டர். ஆகியோரை அறிமுகப்படுத்தினார். தலைமை விருந்தினர்
முனைவர் வி.வீரப்பன், மாநாட்டை துவக்கி வைத்து, செமி கான் ப்யூசன் குறித்து உரையாற்றினார்.
மேலும், மாணவர்கள் பெரிய கனவையும், பெரிய தொலைநோக்கு பார்வையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி,
மாநாட்டு ஆய்வுக் கட்டுரை மலரையும் வெளியிட்டார்.
முனைவர் ஜே. பென்னிலோ ஃபெமாண்டஸ் நன்றியுரை வழங்கினார்.
ஸ்கூல் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், பயோமெடிக்கல் டெக்னாலஜி பேராசிரியர்கள் , டெக்னீஷியன்கள் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.