கிருஷ்ணகிரி நகராட்சி, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மனநல வளாகத்தில், ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மீட்பு மருத்துவ அவசர சிகிச்சை மையம் அமைக்கவுள்ள கட்டிட வளாகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு . அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சாலையோரம் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வயதான மற்றும் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோர்களை கண்டறிந்து அவர்களை மீட்டு உணவு மற்றும் முதலுதவி அளித்து தொடர் சிகிச்சை மேற்கொள்ள கிருஷ்ணகிரி நகராட்சியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் தனி வார்டு அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையத்தில் தனித்தனியாக ஆண்களுக்கு 10 படுக்கைகள் மற்றும் பெண்களுக்கு 10 படுக்கை வசதிகள் அமைக்கப்பட உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லுரி மருத்துவமனையிலிருந்து 1 மன நல மருத்துவர் மற்றும் 1 செவிலியர் சிகிச்சை மேற்கொள்ளவார்கள். மேலும் சிசிக்சையின் போது அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங், மருத்துவ வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட உள்ளது. நன்கு தேறியவர்களை அவர்கள் சரியான முகவரி அளிக்கும் பட்சத்தில் அவர்களை குடும்பத்தாரிடம் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், வெளிபுற நோயாளிகளுக்கு டோக்கன் வழங்கும் பணிகளை பார்வையிட்டு நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் குறைகளை கேட்டறிந்து, நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் விரைந்து டோக்கன் வழங்க மருத்துவ கல்லுாரி முதல்வர் அவர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.பூவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.மது, கண் மருத்துவர் மரு.கிருபாவதி மற்றும் மருத்துவர்கள், துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.