மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள நீடூரில் தமுமுக சார்பில் இஸ்லாமிய பிரச்சார பேரவை மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை இணைந்து மகளிருக்கு எதிரான கொடுமைகளும் மார்க்கம் கூறும் தீர்வுகளும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ஏ.எம்.ஜுபைர் தலைமையில், மாநில செயலாளர் ஐ.முபாரக் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் முனைவர் ஜெ.ஹாஜாகனி கலந்து கொண்டு மகளிருக்கு எதிரான கொடுமைகளும் மார்க்கம் கூறும் தீர்வுகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினர். அதனை தொடர்ந்து கட்சியில் புதிதாக சேர்ந்த எம்.பி.ஏ.பௌஜியா என்பவருக்கு தமுமுக உறுப்பினர் அட்டையை வழங்கினார். இதில் சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.