சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் திருவிக நகர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் வடக்கு பகுதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஓம் ஸ்ரீ மஹா செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனைகளும் சிறப்பு பூஜைகளும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதன் பின்னர்
விழாவிற்கு வருகை புரிந்த பக்தர்களுக்கு மாபெரும்
அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை முனைவர் குன்றத்தூர் எஸ்.இராஜேந்திரன் மற்றும் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
இவ்விழாவில் மைமாம் குழுமத்தின் நிர்வாகிகள் பணியாளர்கள் மற்றும் தொழிற்பேட்டை தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.