தேனி செப் 5:
தேனி மாவட்ட ஆட்சியராக கூட்ட அரங்கில் விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு பணிகள் மற்றும் இந்து முன்னணி மற்றும் அமைப்பாளர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா .சிவப்பிரசாத் முன்னிலையில் நடைபெற்றது தமிழகம் முழுவதும் வரும் 7 ஆம் தேதி சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கு முன்னேற்பாடாக சதுர்த்தி விழா மிகவும் அமைதியான முறையில் நடைபெற இந்த கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் காவல்துறை அதிகாரிகள் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்