அரியலூர்,செப்;17
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்பரப்பி கிராமத்தில் சுமார் 1,200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 3-வது வார்டு மக்களுக்கு நேற்று முறையாக தண்ணீர் வழங்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று செந்துறை – ஜெயங்கொண்டம் சாலையில் பொன்பரப்பியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த செந்துறை போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இனி உரிய நேரத்தில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்