சிவகங்கை: பிப்:08
சிவகங்கை மாவட்டம்
பனையூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வேண்டி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் நுகர் பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளரிடம் கோரிக்கை மனு வழங்கினார்.
பனையூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களின் வாழ்வாதாரம் விவசாயப்பணிகள் மட்டுமே. மேலும் இந்த வருடத்தில் பெய்த மழையின் காரணமாக கண்மாய் மற்றும் கிணறுகளில் தேவையான நீர் இருப்பு இருப்பதன் காரணமாக கோடை நெல் பயிருட்டுள்ளனர்.
எனவே சாகுடி செய்யும் நெல் மூட்டைகளை தனியாரிடம் விற்பனை செய்வதனால் ஏற்படும் நடைமுறைச்சிக்கல்க-ளை தவிர்க்கும் பொருட்டு அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் வேண்டி பனையூர் உடையநாதபுரம், பில்லூர், பொன்னாகுளம், அழுபிள்ளைதாங்கி கிராம விவசாயிகள்ஒன்றுகூடி பனையூர் விவசாயிகளான கோபி மற்றும் அரசு அம்பலம் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், மற்றும் சிவகங்கை நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து பேசிய விவசாயிகள் பனையூர் கிராமத்தில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அரசு அமைத்துக்கொடுத்தால் அது எங்களது கிராமத்தைத்தாண்டியும் இருபதிற்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள பயனடைவார்கள் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனிடையே இதுபற்றி தெரிவித்த நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் கூறும்போது பனையூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல்
நிலையம் நிரந்தரமாகவே அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் இதுபற்றி எடுத்துக்கூறி நிரந்தரமாகவே கொள்முதல் நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பனையூர், பில்லூர், உடையநாதபுரம், அழுபிள்ளைதாங்கி, பொன்னாகுளம் உள்ளிட்ட பல கிராமங்களின் விவசாயிகள் பங்கேற்றனர்.