நாகர்கோவில் – அக்- 02,
தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பு மாநில சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் செல்வம் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மின் மோட்டார் இயக்குவதற்க்கு சிறப்பு படி கேட்டு மனு அளிக்கப்பட்டது அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இராமபுரம் ஊராட்சியிலும் , ராஜாக்கமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ராஜாக்கமங்கலம் ஆகிய இரு ஊராட்சியிலும் பணி புரியும் செல்வன், விஜயகாந்த், செல்வகுமார் ,ஆகிய மூன்று பணியாளர்களுக்கு அரசு ஆணை 71 – ன் படி 7. 8. 2012 முதல் இந்நாள் வரை மின் மோட்டார் இயக்க அரசு அறிவித்த சிறப்பு படியை வழங்கவில்லை. ஆகவே எங்களுக்கு காலதாமதம் செய்யாமல் நிலுவைத் தொகை சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.