தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாட்டில் 12,525 கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் பணி பதிவேடு உள்ள 40-ஆண்டுகாலம் பணிபுரிந்த டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.கிராம ஊராட்சியில் ரூபாய் 250 ஊதியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் டேங்க் ஆப்பரேட்டர்களுக்கு பணி வரன் முறை வேண்டியும், பத்து ஆண்டு பணி முடித்த தூய்மை பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். மூன்று ஆண்டு பணி முடித்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். பத்து ஆண்டு பணி முடித்த கிராம ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு இதுவரை பொங்கல் போனஸ் கூட தமிழக அரசு வழங்கவில்லை இதனை உடனடியாக தமிழக அரசு தூய்மை காவலர்களுக்கு ரூ.5,000 பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினார்கள். இதில் மாநில பொதுச் செயலாளர் விஜயபாலன், மாநில மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி, மாநில இணை செயலாளர் சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சக்கரவர்த்தி, சந்திராமாது, மாதம்மாள், பவுன்ராஜ், சகுந்தலா, சபாநாயகம், மணி, மாவட்ட அமைப்பு செயலாளர் சின்னசாமி மற்றும் டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics