திருப்பத்தூர்:நவ:23, திருப்பத்தூர் மாவட்டம் ஜெயபுரம் கிராமத்தில் நூலக வார விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் ஞானசௌந்தரி தலைமை தாங்கினார். மூன்றாம் நிலை நூலகர் A.R.செல்வராஜ் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட நூலக அலுவலர் கிளமெண்ட், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவர் M.சுந்தரம், கவுன்சிலர் சிகாமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
இவ்விழாவினை முன்னிட்டு நிகழ்த்தப்பட்ட போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். இவ்விழாவில் மூன்று புறவலர்களும், 70 உறுப்பினர்கள் சேர்க்கையும் சேர்த்தனர். நூலகத்தின் முக்கியத்துவம், ஊர்ப்புற வாசிப்பாளர்களின் வளர்ச்சி குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் மாதேஷ் நன்றியுரை வழங்கினார்.