தஞ்சாவூர்.ஜூன் 24.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை தடுக்க கிராம அளவி ல் குழு அமைக்குமாறு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவுறுத் தினார்.
கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வது மற்றும் போதை பொருள்கள் ஒழிப்பது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு தலைமை வகித்த ஆட்சியர் தீபக் ஜேக்கப் பேசிய தாவது:
கள்ள சாராயம், போதை பொரு ள்கள் தடுப்பு பணியில் காவல் துறை, வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை, மருத்துவ துறை, உணவு பாதுகாப்புத் துறை, மது விலக்கு அமலாக்கத்துறை, ஆகிய வை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் தொடர்புடைய அலுவல ர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். கள்ள சாராயம் காய்ச்சுதல், விற்பனை, கஞ்சா, இதர போதை பொருள்கள் விற்ப னை ஆகியவற்றை கண்டறிந்து தடுப்பதற்கான கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், ஊராட்சி செயலர், அங்கன்வாடி பணியாளர்கள், நியாய விலை கடை விற்பனையாளர்கள் முதல் அனைத்து துறை அலுவலர்களை ஒருங்கிணைந்து ஒவ்வொரு கிராமத்திலும் குழு அமைக்கப்பட வேண்டும்.
கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் போதை பொருள்கள் விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு குழுவினர் தகவல் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக தொடர்புடைய கிராம ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவ ர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதி கள் பொதுமக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய தகவலை அனைத்து சமூக பாதுகாப்பு நடவடிக்கை ஈடுபடுத்தி க் கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் போதை பொருள் கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது ,விற்பனை செய்தல் போன்ற சட்டவிரோதமான நடவடி க்கைகளில் எவரேனும் ஈடுபடுவது தெரிய வந்தால் .பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 அல்லது கட் செவி அஞ்சல் செயலி 9042839147 என்ற எண் ணில் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்தால் ,உடனடியாக காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தகவல் தெரிவிக்கும் நபர்களின் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றார் ஆட்சியர்.